தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையமும் ஆதரவு!


2009 ம் ஆண்டு மேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமை இடைவெளி இன்று வரை காணப்படுகின்றதென தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம் தெரிவித்துள்ளது.

எழுக தமிழற்கு ஆதரவாக அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  அந்தவகையில் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக அரசியல் சாராத,கட்சி பேதமின்றி,மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை உதயம் பெற்று பலமக்கள் எழுச்சிப் போராட்டங்களை வடக்கு,கிழக்கு எங்கும் முன்னெடுத்துவருகின்றது. தமிழ் மக்கள் பேரவைக்கு எந்தக் கட்சி உரிமை கோரினாலும் அது ஒரு பொதுவான‘மக்கள் எழுச்சி இயக்கம்’என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதை கட்சிகள் புரிந்துகொண்டுள்ளன.

“எழுகதமிழ் 2019” காலத்தின் கட்டாய எழுச்சி நிகழ்வாகும், காலத்திற்குக் காலம் நாம் எமது இழப்புக்களையும், அநீதிகளையும் வெளிக்கொணராவிட்டால் “தோற்கடிக்கப்பட்ட இனம்”என்ற முத்திரை எம் சந்ததியினர்ருக்கு குத்தப்பட்டுவிடும், எம் இனம் ஓர் அடிமை சாசனம் எழுதப்பட்டவர்கள் போல் ஆகிவிடுவோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மக்கள் இயக்கங்களும், எழுச்சிநிகழ்வுகளும் நடைபெறுவதால்தான் எமது தமிழ் மக்களின் இருப்பு ஓரளவிற்கேனும் புத்துணர்ச்சிபெற்றுக்கொண்டிருக்கின்றது, அந்தவகையில் “எழுகதமிழ் 2019”கடந்த பத்து வருடங்களாக அறவழிப் போரிலும், சாத்வீகமாகவும் போராடிக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களிற்கு ஓர் உந்துசக்தியாக அமைவதுடன் எமது பத்துவருடகாலக் கோரிக்கைகளிற்கு மீண்டும் அதிஉச்ச அழுத்தம் கொடுப்பதாகவும் அமையும்.

அண்மைக்காலமாகதமிழ் அரசியல் பிரதிநிதிகளும்,அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் வடக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் கிழக்குத் தமிழர்களை பாராமுகமாக இருந்து வருவதும் வடக்கு கிழக்கு மக்களால் உணரப்பட்டுவருகின்றது ஆனால் தமிழ் மக்கள் பேரவை வடக்குக் கிழக்கு இணைந்த“தமிழர் தாயகம்”என்ற பின்னனியில் செயற்பட்டுவருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இருந்தும் தமிழ்மக்கள் பேரவையும் காலத்தின் தேவையை உணர்ந்து வடக்குக் கிழக்கு இணைந்த அரசியற் கலப்பற்ற மக்கள் பிரதிநிதிகளை உள்வாங்கி தம்மைமீள்கட்டமைப்புச் செய்துகொள்ளவேண்டும் என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் “எழுகதமிழ் 2019” இன் கோ~ங்கள் பேரம் பேசுதலிற்கு அப்பாற்பட்டவையும்,தமிழ் மக்களிற்கான தற்சமய தேவைகளில் மிகவும் அடிப்படையுமானவை என்ற வகையில் தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையமும் “எழுகதமிழ் 2019” இற்கு எமது பூரண ஆதரவினை வழங்கி ஒன்றிணைவதில் மகிழ்வடைகின்றோம். இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் பங்குகொள்ளுமாறு கேட்டு;க்கொள்கின்றோம் என்றுள்ளது.

No comments