பட்டப்பகலில் வாள்களுடன் அட்டகாசம்

வவுனியா - பண்டாரிகுளம் முனியப்பர் கோவில் சந்தியடியில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இளைஞர்கள் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கிருந்த பொதுமகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இன்று (15) மதியம் 3 மணியளவில் இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பண்டாரிகுளம் முனியப்பர் கோவில் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றிக்கு விளம்பரப்பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிலில் வருகை தந்த இளைஞர் ஒருவர் என்ன வர்த்தக நிலையம் இது என வினவிய பின்னர் வர்த்தக நிலையத்தின் விளம்பரப் பலகையினை சேதப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு குறித்த இளைஞன் வாள் மற்றும் கோடரியுடன் பல இளைஞர்களை அழைத்து வந்து முனியப்பர் சந்தியடியில் அட்டகாசம் செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்களை தடுப்பதற்கு வந்த பொதுமகன் ஒருவர் மீதும் தா க்குதல் மேற்கொண்ட நிலையில் பொதுமகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பண்டாரிகுளம் காவல் அரண் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தில் குழப்பம் விளைவித்த இளைஞர்களை அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பணித்ததுடன் ம துபோ தையில் நின்ற ஒர் இளைஞனை பொலிஸார் பண்டாரிக்குளம் காவல் அரனுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாளுடன் வந்த இளைஞரை பொலிசார் கைது செய்யவில்லை எனவும், பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments