இளைஞனை தாக்கி கைது செய்த பொலிஸார்


வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வன்னிப் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் மதுபான நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் நேற்று மதியம் இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார். எதிர் திசையில் பொலிசார் வாகனத்தில் வந்துள்ளனர்.

பொலிசாரின் வாகனம் செல்வதற்கு இடம்விட்ட பின்னர் குறித்த இளைஞன் அப்பகுதியில் இருந்த மதுபானசாலைக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞனை பின்தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் ம துபான நிலையத்திற்குள் சென்ற குறித்த இளைஞனை தாக்கியதுடன், நீதிமன்ற பிடியாணை இருப்பதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குறித்த இளைஞனின் மனைவி ஏன் கணவரை கைது செய்தீர்கள் என விசாரித்த போது பிடியாணை இல்லை. சந்தேகத்தில் பிடித்தோம். விடுவிப்போம் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் ம துபோ தையில் குழப்பம் விளைவித்ததாக குறித்த இளைஞன் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்து விட்டு இரவு விடுவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மதுபான நிலையத்தில் வைத்து பொலிசார் இளைஞன் மீது தாக்கும் சீசீடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் குறித்த பொலிசாருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இளைஞன் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments