கொள்ளைக்காரன் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம்!

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இந்தநிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டன. மேலும்  பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து சேகர்ரெட்டிக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது.  மேலும் எஸ்.ஆர்.எஸ். மைனிங்ஸ் என்ற மணல் குவாரி நிறுவனத்தின் மூலம் மணல் விற்பனை செய்தது தெரியவந்தது. இத்தனை குற்றச்சாட்டுக்குள்ளான சேகர் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவர்,  திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments