திலீபனின் வழியில் ஆரம்பமாகியது நடைபயணம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூரை நோக்கிய நடைபயணம்
வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

மூன்று அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் நினைவு நாளில் பயணிக்கவுள்ள இந்நடைபயணம் ஏ-9 வீதியினூடாக நல்லூரை வந்தடையவுள்ளது.

அலங்கார ஊர்தியில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு தாய்மார் மலர்மாலை அணிவித்து வீதியெங்கும் மக்களது வணக்கத்துடன் திலீபன் நினைவுதூபியை நடைபயணம் வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments