செம்மலை பிள்ளையாரை ஆக்கிரமித்த தேரர் மரணம்

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குருகந்த ரஜமஹா எனும் பெயரில் விகாரை அமைத்து தங்கியிருந்த விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகாத தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, தேரர் மனநோயால் பாதிப்புள்ளார் என்று பொலிஸாரை மேற்கோள்காட்டி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். அதேவேளை அவரது சார்புச் சட்டத்தரணியால் அதற்குரிய ஆதாரங்கள் அண்மைய வழக்குத் தவணைகளின் போது மன்றுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.

No comments