தொடர்ந்தும் நீதிமன்ற புறக்கணிப்பு?


இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக சட்டமா அதிபர் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.அக்கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் எழுத்து மூல உறுதிமொழி வழங்க வேண்டும். அல்லாவிடில் பணிப் புறக்கணிப்பை தொடர்வதா இல்லையா என மீளாய்வு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பால் நீதிமன்ற அமர்வுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments