தமிழருக்கு ஏதுமில்லை: அநுரகுமார திஸாநாயக்கா?


வடகிழக்கு இணைப்புக்கோ சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கோ சாத்தியமில்லையென ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.அதேவேளை மைத்திரி, ரணில்,கோட்டா ஆகிய கூட்டு களவாணிகளை தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழர்கள் தோற்கடித்தே ஆகவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று இவரை ஆதரிக்கும் "தேசிய மக்கள் சக்தி" வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழர்களிற்கு சுயாட்சி வழங்கப்படும் என்று கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழில் நடாத்திய செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தது.

இதனை மறுதலித்துள்ள அநுரகுமார திஸாநாயக்கா மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழர்கள் தோற்கடித்தே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments