இணையத்தில் வைரலான பார்வையற்ற திருமூர்திக்கு படத்தில் பாடும் வாய்ப்பு!

தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியைச்  சேர்ந்த பார்வைக்குறைபாடுள்ள திருமூர்த்தி என்பவர், அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலை அருமையாக பாடி, அதை முகநூலில் ஒருவர் பதிவேற்றியிருந்தார். அது இணையம்  முகநூல் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் வைரலாகியது.
இந் நிலையில்  தனது முகநூல்  மூலம் அறிந்த தமிழ்  இசை அமைப்பாளர் டி.இமான், தனது அடுத்த படத்தில் அவருக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments