இலங்கை விமானப்படையால் கொல்லப்பட்டவர்களது நினைவேந்தல்!


இலங்கை விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 1995ம் ஆண்டின் இதே நாளன்று கொல்லப்பட்ட வடமராட்சி, நாகர்கோவில் வித்தியாலய மாணவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, நாகர்கோயில் மகா வித்தியாலயம் மீதான இலங்கை விமானப் படையினரின் விமானக் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments