வித்தியா கொலையாளிக்கு மற்றொரு மரணதண்டனை?


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மற்றுமொரு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி நபரொருவரை படுகொலை செய்து 10ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட வழக்கில் இன்றைய தினம் தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே வித்தியா படுகொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மேலுமொரு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments