கோத்தா காலத்தில் ரவிராஜ் உள்ளிட்டோரை கொன்றது யார்? - ரணில் காட்டம்

ஆட்சியாளா்களுக்கு தலையிடி கொடுக்கிறாா்கள் என்பதற்காக பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின் ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவா்கள் படுகொலை செய்யப்பட்டனா். கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என்றவா்கள் புலிகள் தான் அவர்களை கொன்றாா்கள் என கூறினார்கள். அப்படியானால் மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா்? அவர்கள் கைது செய்யப்பட்டாா்களா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாய ஆராய்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று (15) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும்,

யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். நல்லுாா் கோவிலுக்கு சென்றேன், மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றேன், வீடு கையளிக்கும் நிகழ்வுக்கு சென்றேன் பல நிகழ்வுகளுக்கு சென்றேன். இங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் பயமில்லாமல் வாழ்வதை கண்டேன். இது நல்லது. அண்மையில் கொழும்பில் நடைபெ ற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் குண்டுகள் வெடிப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாராளுமன்ற உறப்பினா்கள் சிலா் கூறினா்.

அத்துடன் மஹிந்த ஜனாதிபதியாகவும், கோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாடு பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறினாா்கள். எதிா்காலத்தில் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு இவா்கள் தேவை என அந்த பாராளுமன்ற உறுப்பினா்கள் கூறியுள்ளனா்.

நான் ஒன்றை கேட்கிறேன் அந்த காலத்தில் வீதியில் சென்ற ரவிராஜ் கொலை செய்யப்பட்டாா். மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாா் கோவிலில், மிகுந்த பாதுகாப்பான இடத்தில் புலிகள் சுட்டதாக சொன்னாா்கள். அன்றைய காலகட்டத்தில் இவா்களே கொழும்பில் சகல புலிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினாா்கள்.

அவ்வாறு சொன்னவா்கள் கொழும்பில் மகேஸ்வரன் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை. ரவிராஜ் கொலையாளிகளை ஏன் கைது செய்ய முடியவில்லை என்றாா்.

No comments