அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியது?


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
சிலாபம் பிரதேசத்தில் இருந்து சென்ற ஆண்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பியனுப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.
இவ்வாறு திருப்பியனுப்பட்டவர்கள் விமான நிலைய குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments