நாடு மோசமடைந்து விட்டதாம் - சொல்கிறார் கர்தினால்

தற்போதைய நிலையில் சமூகம் மிகவும் மோசமடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேராயர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மத வாழ்க்கை மீதான நாட்டம் தற்போது பலவீனமடைந்து வருகின்றது. அதேபோல், மதத் தலைவர்களும் முன்னுதாரணமாக இல்லை. மதத் தலைவர்கள் மட்டுமின்றி சமூகத்தில் பல விடங்கள் மோசமடைந்துள்ளன. 

சுயநலமான சுழல் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. தற்போதைய மனிதர்கள் பணம் ஈட்டுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதனால் , நாட்டினுள் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

இதன் காரணமாக அனைவரும் தமக்கான கடமைகளை தூய்மையான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுமாறும், பணம் அல்லது அரசியல் அதிகாரத்தை எதிர்ப்பார்த்து செயற்படக் கூடாது எனவும் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார். 

No comments