Header Shelvazug

http://shelvazug.com/

கப்பூது அந்தணர்திடலில் நீர்த்தேக்கம்?


யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வாக பாரிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதன் இறுதி வடிவம் பூர்த்தியாகியுள்ளது.கரவெட்டி அந்தணர்திடல்; பகுதியில் இந்நீர்த்தேக்க அங்குரார்ப்பண பணிகள் இலங்கை ஜனாதிபதியால் ஆரம்பித்தும் வைக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி - கனகம்புளியடி சந்தியில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில் அந்தணர்திடல் பகுதியிலேயே மழைநீரை எதிர்பார்த்து நீர்த்தேக்கம் அமையவுள்ளது.

இந் நீர்த்தேக்கத்திற்கு நாகர்கோவிலில் ஆரம்பித்து தொண்டமானாறு வழியே கடலுக்கு செல்லும் மழைநீரை மறித்து நீர் சேமிக்கப்படவுள்ளது. சுமார் 10 கிலோ மீற்றர் நீளத்திற்கு ஆறு மீற்றர் உயரமான மண் அணை அமைத்து அமையவுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கப்படவுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான மேற்பார்வையில் அமையவுள்ள  நீர்த்தேக்கத்தின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரியினால் எதிர்வரும்
29 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்து. நான்கு வருடங்கள் நடைபெறவுள்ள திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்கள் தூய்மையான குடிநீரை பெறமுடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பெருமளவு பில்லியன் கணக்கில் இரணைமடுவில் இருந்து நீரை கொண்டுவரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு நடுவில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments