தொடங்கியது ரணில் நரிவேலை?


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய தேசியக்கட்சி வேட்பாளராக களமிறங்கும் சஜித்தின் கரம் வலுப்பட்டுவருகின்ற நிலையில் அதனை தகர்க்க ரணிலின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக சஜித்தின் அமைச்சின் கீழ் வருகின்ற மத்திய கலாசார நிதியத்தில் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான விசாரணைக் குழுவை ரணில் நியமித்துள்ளார்.

அத்துடன் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்க விசாரணையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே சஜித்தை விட கரு ஜெயசூரியாவிற்கே கூடிய ஆதரவு இருப்பதாக புதிய தகவல்களை தனது ஆதரவு ஊடகங்கள் ஊடாக ரணில் பரவவிடுத்துள்ளார். 

இதனிடையே ரணில் புதிய வியூகம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments