ரணிலின் விருந்துபசாரம் நாளை?


ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை முன்னிலைப்படுத்த முனைப்புக்கள் பெற்றுவருகின்ற நிலையில் அனைத்து அமைச்சர்களுக்கும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நாளைய தினம் இரவு நடைபெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் பூர்த்தியை முன்னிட்டு இவ் விருந்துபசாரம் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளதாக ரணில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்கும் கூட்டமொன்றினை குழப்பியடிக்கவே விருந்துபசார அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

No comments