ஜெயந்தன் படையணிப் போராளி கப்டன் ஆட்சிநம்பியின் 13 ஆம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழில்கொஞ்சும்
அழகிய கிராமங்களில் ஒன்றான சித்தாண்டி

மண்ணில் மோகனசுந்தரம் (மோகன்) என்ற இயற்பெயரை கொண்ட ஆட்சி நம்பி பிறந்தான் காசுபதி அவர்களின் கடைசி மாகனான மோகான் வீட்டின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தான் ஆரம்ப கல்வியை மத்திய மாக வித்தியாலையம் சித்தாண்டியில்( m.m.v ) மேற்கொண்ட மோகன் குடும்ப கஷ்ரநிலமை காரணமாக தனது படிப்பை இடைநடுவே விட்டுவிட்டு தனுது தந்தையுடன் விவசாயம் செய்வது மாடு மேய்ப்பது என தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தான்

அந்த காலகட்டத்தில் தான் வீட்டுக்கொரு போராளி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இனையவேண்டும் என சொல்லப்பட்டது எல்லாரது வீடுகளுக்கும் கடிதங்கள் வந்தது போலவே மோகனின் வீட்டுக்கும் கடிதம் வந்தது கடிதத்தை கண்டவுடன் தனது நண்பன் ஒருவனுடன் 2002ம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இனைத்துக்கொண்டான்

ஆட்சிநம்பி என்ற இயக்கப் பெயருடன் ஆரம்ப பயிற்சியை டோறாபோறாவில் முடித்தான் சிலநாட்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஆட்சிநம்பி பின்னாளில் வன்னிசொல்லும் அணிகளுடன் அவனும் அனுப்பப்பபடான் வன்னி சென்றதும் ஜெயந்தன் படையணியல் இனைக்கப்பட்டான்

வன்னியில் கனரகரப்பயிற்சிகள் படிப்புகள் என அவனுடை நாட்கள் கடந்தன மாடு மோய்த்தவனையும் தத்துவமேதை ஆக்குவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்துவம் அப்படித்தான் ஆட்சிநம்பிக்கும் அவனுடைய திறமைக்கு ஏற்றவாறு களங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டன அனைத்திலும் அவன் அவனுடைய திறமையை வெளிக்காட்டினான் கவிதைகள்,கட்டுரைகள் ,சிறுகதைகள் எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகமாகின..!

இந்த காலகட்டத்தில் தான் மட்/அம்பாறை மாவட்டத்தில் துரோக இருள் சூழ்ந்திருந்தது
துரோகத்தை துடைத்தொளிக்க மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஜெயந்தன் படையணி அனுப்பப்பட்ட போது அந்த அணிகளுடன் ஆட்சிநம்பியும் களம் இறங்கினான் மட்/அம்பாறை மாவட்டத்தில் துரோகம் முறியடிக்கப்பட்ட பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்கட்டமைப்புக்காக ஆட்சிநம்பியும் அரும்பாடுபட்டான் மீட்டும் பயிற்சிகள் படிப்புகள் என அவனுடைய நாட்கள் கடந்தன வாரா வாரம் ராஜன் கல்விப்பிரிவால் வெளியாகும் புத்தகத்தில் ஆட்சிநம்பின் கவிதைகள்,கட்டுரைகள்,சிறகதைகள் என போராளிகள் விரும்பி் படிக்கும் அளவுக்கு அவனுடைய வளர்ச்சி இருந்தது

லெப்.கேணல் பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகள் படிப்புக்காக ஆட்சிநம்பியும் உள்வாங்கப்பட்டான் படிப்பு நடந்து கொண்டு இருந்த நேரத்தில் கிராமிய பயிற்சி நிறைவை முன்னிட்டு அவர்களை கெளரவிப்பதற்காக தேனகத்தில் நிகழ்வு ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தது அந்த நிகழ்வுக்கு அதிகாரிகள் போராளிகளும் கலந்து கொண்டனர் அதில் ஆட்சிநம்பியும் கலந்து கொண்டு இருந்நான் அன்றைய தினம் தேனம் மீது சிறீலங்கா இராணுவம் மோற்கொண்ட விமானத்தாக்குதலில் ஆட்சிநம்பி அன்று அதிஷ்டவசமாக உயிர்தப்பினான்

அதன் பின் அதிகாரிகள் அணி கல்லூரி சென்று போராளிகளுக்கு படிப்புகள் நடந்து கொண்டு நேரத்தில் மாவிலாற்று சண்டை ஆரம்பமானது மாவிலாற்று சண்டைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஜெயந்தன் படையணி சென்றபோது அதிகாரிகள் அணியும் அதனுடன் இடைப்பட்டன அதில் ஆட்சிநம்பியும் சென்றான் அங்கு சென்றதும் சண்டைகளில்
களம் இறங்கி சண்டைக்களத்திலும் அவனுடய திறமையை வெளிக்காட்டினான்

G.P.S (பூமி நிலைகான் தொகுதி) அவன் ஆரம்பத்தில் கற்று இருந்தான் அதனால் அவனுக்கு அங்கே தகடு போடும் பணி கொடுக்கப்பட்டது அவனுக்கு கொடுக்கப்பட்ட பணியை அவன் திறன்பட செய்து கொண்டு இருந்த வேளையில் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் தமிழீழத் தாய்மன்னை முத்தமிட்டான்
தமிழீழக் கனவோடு இரவு பகலாக எமது விடுதலைக்காய் உழைத்த ஜீவன் அன்று விழிமூடியது.

நினைவுப் பகிர்வு-(நிதன்)

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

No comments