சிறிய சண்டை பூதாகரமானது; 16 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

கண்டி, கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில், எந்த வித காரணமும் தெரிவிக்காமல், 16 ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, புஸ்ஸலாவையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பெண் அதிபருக்கும் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆசிரியைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, கைகலப்பாக மாறி, குடுமிப்பிடி சண்டை இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்தச் சண்டை இடம்பெற்றதையடுத்து, அந்தப் பாடசாலையில் பணியாற்றி வந்த 8 ஆசிரியைகள், அதே கல்வி வலயத்துக்கு உட்பட்ட வேறொரு பாடசாலைக்கும் அந்தப் பாடசாலையிலிருந்து இந்தப் பாடசாலைக்கு 8 ஆசிரியைகள் என, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால், மொத்தம் 16 ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments