எமது இறையாண்மையில் எவரும் கை வைக்க முடியாது! திஸ்ஸ

எமது நாட்டின் இறையாண்மையில், இராணுவத் தளபதியின் நியமனத்தில் சர்வதேச எந்த நாடுகளும் தலையிட முடியாது என்று லங்கா நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.

இன்று (25) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் எமது நாட்டின் நீதித்துறை ஊடாக விசாரிக்க முடியும். என்றார்.

No comments