ஜநா அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?



இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



லெபனான், மாலி மற்றும் தெற்கு சூடானில் தற்போது சுமார் 415 இலங்கை இராணுவ வீரர்கள் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சம்பளமும் கிடைக்கிறது.



இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அதிருப்தி தெரிவித்திருந்தன. இவற்றில் சில நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளன.



இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இராஜதந்திர முயற்சிகளின் மூலம் இந்த விவகாரத்தை சமரசம் செய்ய முயன்று வருகின்றர். இராணுவத்தளபதியை நியமித்தது ஜனாதிபதியின் முடிவு, இது அரசாங்கத்துடன் தொடர்புபட்டல்ல என இராஜதந்திர வட்டாரங்களை சமரசப்படுத்த அரசு தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



அடுத்தடுத்த வாரங்களில், இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் பணி குறித்து சர்வதேச சமூகம் தெளிவான முடிவை எடுக்குமென தெரிகிறது.

No comments