முதலிடமில்லையாம்:கோபித்த சாந்தி?


வவுனியாவில் இன்று நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவு நாளில் தனக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா வெளிநடப்பு செய்துள்ளார்.அவரது நாகரீகமற்ற இச்செயல் பொதுமக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுநாள் நடைபெற்றது.இதில் பிரதம விருந்தினர் உரையை சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் ஆற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்;தது.
எனினும் குறித்த சட்டத்தரணி உடல்நலக் குறைவால் உரையாற்ற முடியவில்லை.இதன்பொழுது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதம உரை ஆற்றுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை கேட்டுள்ளார். சிவசக்தி ஆனந்தன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் கோரிக்கைக்கு அமைய உரையை நிகழ்த்தினார்.மேலும் சட்டத்தரணி மு.சிற்றம்பலம் உடல் நலக்குறைவு காரணமாக பண்டரவன்னியனின் சிலை வரை வந்து தனது உடல் நலக்குறைவினை தெரிவித்தே வீடு திரும்பியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் தனக்கு பேச முன்னுரிமை தரவில்லையென கோபமடைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா கோபமடைந்து நிகழ்வில் குழப்பம் விளைவித்து வெளியேறினார்.இங்கு அடங்கா தமிழ் மன்னனின் முக்கிய நிகழ்வை கூட தனது சுயநல அரசியலுக்காக குழப்ப முற்பட்டிருக்கிறார்.ஒரு மக்கள் பிரதிநிதி பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா?இது ஒரு நாகரீகமான செயலா? ஏன அங்கு திரண்டிருந்த மக்கள் சீற்றமடைந்திருந்தனர்.

No comments