மேலுமொரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது!

வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய படைகள் கைப்பற்றியுள்ளது என ஈரான் அரசுசார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வளைகுடாப் பகுதியில் ஈரானின் ஃபார்ஸி தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டது என்றும் ஈரானின் உத்தியோகபூர்வ Fars செய்தி நிறுவனம் கூறியுள்ளது. புதன்கிழமை கைப்பற்றப்பட்டதாக லெபனான் அல்-மயேடென் தொலைக்காட்சி நிலையமும் தெரிவித்துள்ளது.

இது வெளிநாடு கப்பல் என்றும் அனால் இது சில அரேபிய நாடுகளுக்குக்கே எரிபொருளை கடத்திக் கொண்டிருந்தது." என்று அரசாங்க தொலைக்காட்சிகள் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவு (IRGC) தளபதி ரஸ்ன் ஜிர்சி கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
700,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்தது என்றும்  அதில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

No comments