தமிழக கல்வித்துறையை சிதைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள்- கொண்டல் சாமி

ஆகஸ்ட் 16,2019 அன்று மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission (UGC)) இந்தியாவிலிருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில் மாநிலங்களிலுள்ள பல்கலைகழகங்களில் இந்த ஆண்டே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறது. கிட்டதட்ட இந்தியாவிலிருக்கிற எல்லா மாநிலங்களும் ஏற்கனவே அந்த 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திவிட்ட சூழலில், ஏன் இப்படியொரு அறிக்கையை மத்திய பல்கலைக்கழக மானியக்குழு தற்பொழுது அனுப்பவேண்டுமென்று ஒரு கேள்வி இயல்பாக எழுகிறதா? ஏனென்றால் தமிழகத்தில் இன்னும் வருடத்தில் 8லட்சம் மட்டுமே சம்பாதிக்கும், 5ஏக்கர் நிலமும் 1000சதுர அடி சொந்த வீடு மட்டுமே வைத்திருக்கிற பரம ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றாமல் இருக்கிறது. ஆகவே தமிழகத்திலுள்ள 13 பல்கலைக்கழகத்திலும் இதனை உடனடியாக நிறைவேற்றுங்களென்று மறைமுகமாக உத்தரவிடுவதற்கு தான் இந்த சுற்றறிக்கை. https://timesofindia.indiatimes.com/city/chennai/implement-ews-quota-from-this-year-ugc-to-varsities/articleshow/70745699.cms

தமிழகத்தில் ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே அனைத்து படிப்புகளுக்குமான அட்மிசன் நடந்து முடிந்து விட்டது. மேலும் தமிழகத்திலிருக்கிற 97% பேர் இந்த சமூக அநீதியை எதிர்க்கிறார்கள். எனவே தான் தமிழக அரசு இன்னும் இந்த இடஒதுக்கீடு மீது கொள்கை முடிவு எடுக்காமல் இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே நீட் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை தெரிவிக்கமாலே அதை நடைமுறைபடுத்தியது போல, இந்த இடஒதுக்கீடு முறையிலும் ஏதேனும் பித்தலாட்டங்களை செய்யுமென்றால் தமிழக அரசு தமிழக மக்களிடமிருந்தும் குறிப்பாக மாணவ சமுதாயத்திடமிருந்து முற்று முழுதாக அந்நியப்பட்டுவிடும் நிலைமை உருவாகும்.
ஏற்கனவே தமிகத்திலிருக்கிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 52 பிரினிஸ்பால் பணியிடங்களை பல மாதங்களாக நிரப்பாமல், கல்லூரி நிர்வாகமே முடங்கிபோய் மாணவர்களின் வாழ்க்கை பாழாகிக்கொண்டிருக்கிறது ஒருபுறம் https://timesofindia.indiatimes.com/city/coimbatore/52-tamil-nadu-colleges-do-not-have-a-principal/articleshow/70753044.cms.

மறுபுறம் ஒட்டுமொத்த கல்வி சூழலையே பெரும் பாதிப்புக்குள்ளாக்க போகும் ”தேசிய புதிய கல்விகொள்கை 2019” மீது எந்தவொரு தெளிவான கொள்கை முடிவும் எடுக்காததானால் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பு ஆகியோர் தனித்தனியாக மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிற நிலைமை. https://timesofindia.indiatimes.com/city/chennai/teachers-oppose-3-language-plan-changes-to-exams/articleshow/70745313.cms

இதுபோக நீட் என்ற மோசமான நுழைவுதேர்வை ஆதரித்துவிட்டு அரசே நீட் கோச்சிங் செண்டர் நடத்துமென்று சப்பைகட்டு கட்டிய தமிழக அரசு. போனவருடம் அரசு கோச்சிங் செண்டரில் 19,355பேரில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற நிலைமையை உண்டாக்கியது அதைவிட பெருங்கொடுமை இந்த வருடம் 412 பயிற்சி மையங்களில் ஒன்றில் கூட இன்னும் பயிற்சியையே தமிழக அரசு ஆரம்பிக்கவே இல்லை.இப்போழுது மாணவர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறது. https://timesofindia.indiatimes.com/city/chennai/neet-coaching-for-govt-school-students-yet-to-begin/articleshow/70745329.cms

இப்படி தமிழகத்தின் கல்வி நிலையையே பெரும் கேள்விக்குள்ளாக்கும் மிக முக்கியமான கட்டத்தில், அதனை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் இந்த 10% இடஒதுக்கீடு முறையை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அமல்படுத்தலாமென்று தமிழக அரசு நினைக்குமேயானால் அது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்கிறது என்று அர்த்தம்.

No comments