புகுந்த வீட்டுக்கு போவது போன்ற உணர்வு! சந்திரயான்-2 குறித்து சிவன் பெருமிதம்

மணமகள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போவது  போல எனக்குள் உணர்வு என்று சந்திரயான்-2 இயக்கதின் பிரதானியும்  இஸ்ரோ விண்வெளி தலைவருமான சிவன் தெரிவித்துள்ளார். 28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவது குறித்து அவர் ஊடகவியாலர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்:-
திட்டமிட்டபடியே சந்திரயான் 2 நிலவை நோக்கி முன்னேறியது. முதல் நாளில் இருந்து இன்று வரை எப்படி திட்டமிடப்பட்டதோ, அப்படியே சந்திரயான் 2 சீரான முன்னேற்றம் பெற்று வருகிறது. நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும்.

வரும் செப்டம்பர் 2ம் தேதி மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்ரம் லேண்டர் சந்திராயனில் இருந்து பிரியும்.

மணமகள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போவது போல சந்திரயான் 2  பூமியில் இருந்து நிலவுக்கு சென்றுள்ளது. இது பெருமைகுரிய ஒரு நிகழ்வு.  நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி சந்திரயான் 2 தரை இறங்கப்போகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி, திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில் சந்திரயான் 2 தரை இறக்கப்படும். இதற்கு உங்கள் அனைவரின் துணையும் அவசியம். எங்களுக்கு அது நல்ல எனர்ஜியாக இருக்கும்.

எப்போதும் உறுதுணையாக இருங்கள். நிலவில் கால் பதித்து சந்திரயான் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க போகிறது. இந்த நிகழ்வை காண பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments