பேரவையினரை சந்தித்த சுவிஸ் பிரதிநிதி!


தமிழர் மரபுரிமைப் பேரவையினருக்கும் சுவஸ் நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக புதிதாக இலங்கைக்கு வந்துள்ள சிடோனியா கபிரியேல் அவர்களுக்கும் இடையிலான முக்கியமான நீண்ட கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டன .குறிப்பாக தமிழர் மரபுரிமைப் பேரவையினரிடம் ஆதாரங்களுடன் கூடிய பல்வேறு தகவல்கள் காணப்படுவதால் இவர்களை சந்தித்தாக கூறப்படுகிறது.இச சந்திப்பில் வட கிழக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கம் தொடர்பான விடயங்கள் காணாமல் போணோர் தொடர்பான விடயங்கள் அரசியல் கைதிகள்  மற்றும் போர் முடிந்து பத்து வருடங்களாகியும் வட கிழக்கில் இடம்பெறுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆதாரங்களுடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது .மேலும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாகவும் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தல்தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

No comments