சிவரூபன் கைதில் மௌனம் ஏன்!?


பளைப் பிரதேசத்தில் வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

விசாரணை என்பது எவ்வாறு இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. நாளாந்தம் அதை எடுத்தோம் இதை எடுத்தோம் என்று செய்திகள்...

ஒரு வைத்தியர் 10 வருடங்கள் கடந்தும் இந்த வெடிபொருட்களை வைத்து சேமித்து யாரையும் கொல்ல சதி செய்தார் என்றால் இது நம்பக்கூடியதாக இல்லை. எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இதற்கு முதலே அவருக்கு கிடைத்திருக்கும். செய்திருப்பார்.

வேதனையின் விளிம்பில் "ஓம்" என சொல்லவைப்பதுதான் இலங்கைச் சிறைச்சாலைகளின் கைவந்த வேலை என்பது புதியதல்ல.

எது எப்படுயிருப்பினும் இது விடயம் சம்மந்தமாக சகல தரப்புக்களுடனும் பேசி மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தவேண்டிய பொறுப்புடையவர்கள் மௌனமாக இருப்பது ஆரோக்யமானதல்ல.

அரசியல் , சமூகப் பிரதிநிகளின் அசமந்தம் மற்றும் ஒத்தோடலினால் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது , இவர்களை வைத்து சமூகத்தைக் காக்கும் ஓர் நிலையை உருவாக்கவேண்டும் இல்லையேல் அழித்தொழிக்கப்படுவோம்!

(சிவசோதி விஜயரூபன்)

No comments