ஒன்றாக இறங்கப் போகும் சஜித் - ரணில் - கூறுகிறார் கவிந்த

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்வதே ஒரே நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரிடம், ரணிலுக்கும் - சஜித்துக்கும் இடையில் நடைப்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வினவப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர், எதிர்வரும் தேர்தலில் வெற்றிப்பெறகூடிய வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இருவரும் பேசியதாக கூறினார். 

இதேவேளை, ரணிலும் - சஜித்தும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் எனவும் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments