தந்தை போல் உயிரையும் விடுவேன் - ஜனாதிபதிக் கனவில் சஜித் அறைகூவல்

மக்களுக்காக இந்த நிமிடமே உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். எனது தந்தை போல் நாட்டுக்காக நடு வீதியில் உயிரை தியாகம் செய்யவும் நான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (12) மாலை பதுளையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வில் அவா் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவரது உரையின் முக்கிய சாராம்சம்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ, பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். புலனாய்வுத்துறைய மேம்படுத்த வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் சொற்ப வருமானத்துடனேயே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வில் வறுமை தாண்டவமாடினாலும், தனியார் கம்பனிகள் அதிக இலாபம் பெறுகின்றன. எனவே, தோட்டத் தொழிலாளர்களை நாம் அரவணைத்து பாதுகாப்போம்.

தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள். இவற்றை உருவாக்குவது யார்?. அது எப்படி உருவாகின்றது என்பதை பார்க்க வேண்டும்.

நாட்டின் இறையாண்மையை நாம் பாதுகாப்போம். நாட்டினை பிரிக்க எந்த சக்திக்கும் இடமளியோம். இன, மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். நாங்கள் பலவீனமானவர்கள் இல்லை. நான் பயந்தவன் இல்லை!. என்றார்.

No comments