தெற்கு பிச்சை போடுவது பற்றி பேசுகின்றது?


இன்று ஆட்சியில் உள்ளவர்கள் எமது உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. சலுகைகளைத் தரத் தாம் ஆயத்தம் என்றே தம்மைக் காட்டிவருகின்றார்கள். எம்மவர்களும் காலத்திற்குக் காலம் புதிய வாக்குறுதிகளுடன் அரசியல் பயணத்தில் தொடர்கின்றார்களே தவிர மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றார்களா என்பது வலுவான சந்தேகத்தைத் தருகின்றதென முன்னாள் வடமாகாண முதலமைச்சமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர்   எமது உரிமைகளை வலிந்து முன்மொழிவதற்கும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமது தமிழ் அரசியல்த் தலைமைகளுக்குக் கிட்டிய போதும் அவற்றை எல்லாம் தமது அதிமேதாவித் தனத்தால் தூக்கியெறிந்து நிபந்தனைகள் எதுவுமற்ற ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கி அரசாங்கத்தின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இதனை எம்மவர்கள் அரசாங்கத்தவர்களுக்கு சுட்டிக்காட்டத்தமது தவறுக்குப் பதிலீடாக,எம்மவரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிதிகளை வழங்கி வீதிகள் புனரமைப்பதற்கும் மற்றும் சிறுசிறு அபிவிருத்தி வேலைகளுக்கு நிதியைபயன்படுத்துவதற்கும் வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எம்மவரும் அவற்றை சலுகை அரசியலின் பெறுபேறுகள் என்று நினைத்து மகிழ்ந்துள்ளார்கள்.

இவையெல்லாம் இந்த அரசின் பெருந் தன்மையால் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எனக் கூறப்படுகின்றது. எமது மக்களின் மேம்பாட்டிற்காக எம் மக்களிடமிருந்து பெற்றவரிப் பணத்தில் ஒருதொகையைப் பிரித்து வழங்கிவிட்டு எம் மக்களுக்கு ஒருவரும் செய்யாதமிகப் பெரிய சேவையைத் தாம் வழங்கிவிட்டதாகமார்தட்டுகின்றார்கள் அரசாங்கத்தினரும் அவர்களின் அடிவருடிகளும்! இவைகள் எல்லாம் எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரித்துக்கள். 30 ஆண்டு யுத்தத்தின் பயனாக ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யகாலந் தாழ்த்தி எமக்குத் தரப்பட்டுவரப்படும் உதவிகளே இவை. 

நூன் வடமாகாணசபையில் பதவியில் இருந்தபோது எமது அவசர தேவைகளை ஈடுசெய்ய பன்னிரெண்டாயிரம் மில்லியன் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டபோது இரண்டாயிரம் மில்லியனுக்குக்குறைந்த நிதியைத் தந்தார்கள். அவற்றை நாம் ஒருசதம் மிச்சம் வைக்காமல் மக்கள் நன்மைக்குப் பாவித்தோம். எமக்குத் தரப்பட்டநிதியின் பத்து மடங்கு நிதியை மத்திய அரசாங்க அமைச்சர்கள் தம் வசம் எம் சார்பில் வைத்திருந்துதாம் எமக்கு உதவி செய்துவருவதாகக் காட்ட முனைந்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த பணத்தை மாவட்ட செயலாளர்கள் முற்றாகச் செலவு செய்ய முடியாமல் மத்திக்குத் திருப்பிஅனுப்பினார்கள். அதை வைத்து வடமாகாணத்தவர் பணத்தைத் திருப்பிஅனுப்பிவிட்டனர் என்று கூறிஎமதுமாகாணசபையேஅதற்குப் பொறுப்புஎன்று கூறிஅரசியல் இலாபம் பெற்றார்கள். 

 தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்துபயணிப்பதன் மூலம் எமதுமக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யமுடியாது என்ற நிலையிலேயே தனி வழி போக நான் எத்தனித்தேன். சிலர் கேட்கலாம் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் துயர் துடைப்பதற்காகஅரசியற் பிரவேசம் அவசியந் தானாஎன்று.அவர்களுக்கு நான் கூறக் கூடிய பதில் எமதுஅரசியற் பிரவேசம் என்பதுசுயநலத்திற்காகஅல்ல. ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாமல் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதுகடினம் என்பதைஉணர்ந்துள்ளோம். எமதுமக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் ஏக்கங்களையும் எமதுஅரசிற்கும் சர்வதேசஅரசியற் பிரதிநிதிகளுக்கும் பல்வேறுபட்டநாடுகளுக்கும் எடுத்துக் கூறுவதற்கும் அவர்களை இந்தவிடயங்களில் தலையிட்டுதீர்வுகளைப் பெற்றுத் தருமாறுகோருவதற்கும் மக்களின் அங்கீகாரம் அவசியமாகின்றது. அரசியல் அதிகாரம் பெற்றால்த்தான் மக்களின்அங்கீகாரமும் கிடைக்கின்றது. 2013ல் என்னைஅமோகவெற்றியுறசெய்ததின் பலனேஎனக்குஅளிக்கப்பட்டஅந்தஅங்கீகாரம். 
அந்தஅங்கீகாரத்தைவைத்தேநாம் சர்வதேசத்திற்குஉண்மைநிலையை இடித்துக் கூறக் கூடியஒருசந்தர்ப்பம் கிடைத்தது. அதனாலேயே ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் தீர்மானங்களைநிறைவேற்றாமல் ஏமாற்றுவழிமுறைகளைஅரசுமுன்னெடுத்தபோது ஐ.நா மனிதஉரிமைகள் சபை சற்றுவிழித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எம்மைக் காணவந்த இளவரசர் ஹூசேன் போன்றோருக்குநாம் எழுத்து மூலம் கொடுத்ததரவுகள் தான் ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் செய்திகளில் பிரதிபலித்தன. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைதொடர்பானஉண்மைநிலையையும் உலகம் அறிந்துகொள்ளக் கூடியதாகவும் நாம் செய்தோம்.

மக்களுக்குக் கொடுத்தவாக்குறுதிகளை இறுதிவரை மனதில் வைத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களே இன்று அரசியலுக்குத் தேவைப்படுகின்றார்கள் எனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments