கோத்தாவா?ரணிலா?கும்பிடு போடுவதில் தமிழரசு தள்ளாட்டம்!



ரணிலுக்கா அல்லது கோத்தபாயவிற்கா தொடர்ந்து கும்பிடு போடுவது தொடர்பில் தமிழரசுக்கட்சி தள்ளாடத்தொடங்கியுள்ளது.இது தொடர்பில் கட்சி தலைவர்கள் மௌனம் காத்திருக்க முந்திரிக்கொட்டைகள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளன.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு என்னென்ன செய்யவுள்ளோம் என சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக சொல்லக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும். அத்துடன் தேர்தலில் போட்டியுடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தபோது,நாட்டில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என அருமுகப்படுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்களை இரகசியமாக சந்தித்தனர், அவர்களை இரகசியமாக சந்தித்தனர் என சிலர் புரளிகளை கிளப்பி வருகின்றனர். அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஒன்று வரும் போது பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புக்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும். அவர்களில் தமிழ்மக்களுக்கு நாம் என்னென்ன தேவை என கோருகின்ற போது அவற்றை நாம் செய்வோம் என சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக துணிந்து சென்று கூறக் கூடிய தரப்புக்கு நாம் ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என்றார்.

No comments