வெற்றி பெறும் வேட்பாளர் யார்? - உண்மையை போட்டுடைத்த மங்கள

சஜித் பிரேமதாச தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர் என தாம் நினைத்தாலும் அத்தீர்மானத்தை பாராளுமன்ற குழுவும் செயற்குழுவும் தான் தீர்மானிக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவுக்குழு ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என தெரிவித்த மங்கள சமரவீர, வெற்றிபெறும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு கூறினார்.

No comments