இந்தப் பிரேமதாச தோற்க மாட்டான் சவால் விடுத்து பேசிய சஜித்


மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன் என்று மட்டக்களப்பு - கல்குடாவில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார்.

மேலும்,

எமது நாட்டு மக்களுக்காக, அவர்களது தேவைக்காக, அபிவிருத்திக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து வழங்கும் ஒத்துழைப்புடன் நட்டு மக்களை ஐக்கிய இலங்கையூடாக, தேசிய பாதுகாப்புக்கூடாக, சிறந்த முற்போக்கு அபிவிருத்தியுடன் நாட்டை கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.

உங்களால் வெற்றி பெற முடியுமா?, வெற்றி பெறுவீர்களா? என்று கேட்கின்றார்கள். பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை, இந்த பிரேமதாசவும் தோற்கப்போவதில்லை. இந்தமுறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல மக்களும் தான். எனவே உங்களின் வியர்வை மற்றும் உழைப்பில் உயர்ந்தவனாக உங்களில் ஒருவனாக, எனது ஆடையில் எந்த மாற்றமும் வராமல், சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுபவன் அல்ல.

உங்ளோடு இருந்து கொண்டு உங்களுக்காக சேவை செய்வதற்கு எப்போதும் உள்ளேன் என்பதை கூறுவது வேறு யாருமல்ல சஜித் பிரேமதாச என்பதை கூறிக் கொள்கின்றேன். நாட்டு மக்கள் புதிய பாதையை, புதிய வேலைத் திட்டங்களை நோக்குகின்றார்கள். புதிய அபிவிருத்தி வளங்கள் என்பவற்றுக்கான நாட்டிலே தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தொழில் முயற்சி மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இரண்டிலும் தான் ஒரு நாடு அபிவிருத்தியின் பால் ஈர்க்கப்படும்.

இன்று அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகின்றார்கள். தொழில் முயற்சியை பேசுகின்றார்களே தவிர தொழில் முயற்சியின் மூலம் இலங்கை அபிவிருத்தி அடைந்துள்ளது என்றால் பொய் என்றே கூற வேண்டும். கனிசமான அளவுக்கு இலங்கையில் தொழில் முயற்சியை பயன்படுத்தவில்லை. அரசியல்வாதிகள் பேசும் பேச்சளவிற்கு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி காணவில்லை என்றே கூறவேண்டும். என்றார்.

No comments