பாட்டுப் பாடி வைரலான பெண்ணுக்கு, 55 லட்ச ரூபாய் வீடு!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பாட்டு பாடி காசு வாங்கும் ரனு மண்டல் என்ற வயதான பெண், பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை கேட்ட ஒருவர் அவரது வாய்ஸில் மெய் சிலிர்த்துபோய், அவர் பாடுவதை வீடியோ எடுத்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
 அவரது முகநூலில் பதிவான அந்த வீடியோ சமூகவல்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வைரலான அந்த பெண் ரனு மண்டலை அழைத்து பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடும் வாய்ப்பளித்தது. ரனு மண்டல் அந்த நிகழ்ச்சியில் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார்.

ரயில் நிலையலத்தில் பாட்டு பாடி வந்த பெண்ணுக்கு திரைபடத்தில் பாடும் வாய்ப்பை அளித்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு சமூகவல்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,  ரயில் நிலையத்தில் பாட்டு பாடி வந்த ரனு மண்டலுக்கு இந்திய ரூபா.55 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை நடிகர் சல்மான் கான் பரிசாக தந்துள்ளதாகவும், மேலும் அடுத்ததாக சல்மான் கான் நடித்துவரும் தபங -3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

No comments