45 ஆயிரம் ஏக்கர்களை விடுவித்து விட்டோம் - ரணில் பெருமிதம்

இராணுவத்தினர் வசமிருந்த 45581 ஏக்கர் காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (15) மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைத்து உரையற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

மயிலிட்டிப் பகுதியில் 200 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. மீள் எழுச்சி கிராமமாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதனை நாம் பூர்த்தி செய்து தருவோம். வீடு இல்லாப் பிரச்சினை தீர்க்கப்படும்.

2015ம் ஆண்டு முதல் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 45,581 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு அவசியமான காணிகளை தவிர்ந்த அத்தனை காணிகளையும் விடுவிக்க முடிந்தவரை நடவடிக்கை எடுப்போம்.

யுத்தத்தால் யாழ்ப்பாணம் முற்றாக சீரழிந்தது அந்த யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக ஈடுபடுவேன் என உறுதிபட கூறுகின்றேன்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் கட்டியெழுப்ப இருக்கிறோம். அதற்கு நான் ரிஷாட்பதியுதீன் உடன் உரையாடி இருக்கிறேன். மயிலிட்டியில் ஒரு கைத்தொழில்ப் பேட்டையை உருவாக்குவது எமது நோக்கம். என்றார்.

No comments