அடிக்கல் நாட்டினார் மைத்திரி:திறந்து வைத்தார் ரணில்?


மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்.மயிலிட்டி துறைமுகம் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது. என இராணுவம் உறுதியாக கூறியிருந்த நிலையில்

நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட துடன் மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் ஞெலுத்தப்பட்டது. 

இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்த புனரமை ப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்து ள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திற ந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லினையும் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

No comments