பக்தர்களை பரிசோதிக்க வந்தது இயந்திரம் - தாறுமாறாக ஒலி எழுப்புகிறதாம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களை பாதுகாப்பு காரணங்களினால் சோதனையிடுவதற்கு ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் உலகோ பரிசோதனை (metal detector) ஸ்கானர் ஒன்று இன்று (15) மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஸ்கானர் ஊடாகச் செல்லும் போது ஊசி, கைபேசி, நகைகள் என்பவற்றுக்கு எச்சரிக்கை ஒலி ஒலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக நாளை ஆளுநர் ஆலயத்திற்கு வருகை தந்த பின்னரே குறித்த இயந்திரத்தை யன்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

No comments