சஜித்துக்கான ஆதரவு அதிகரிப்பு - குழப்பத்தில் ரணில்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பெரும்பாலான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு தெரிவிப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 80ற்கும் மேற்பட்டோர் சஜித் பிரேதாசவை வேட்பாளராக களமிறக்க ஆதரவு தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
இந்நிலையில் 50 பேரின் கையொப்பத்துடன் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதில் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை கூட்டி தீர்மானம் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இன்னும் கட்சி தலைவரினால் அது தொடர்பாக இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழுவை கூட்ட தாமதம் ஏற்படுமாக இருந்தால் கட்சிக்குள் எதிர்வரும் நாட்களில் புரட்சி நிலைமையொன்று உருவாகலாம் என கூறப்படுகின்றது.

No comments