சஜித்தை களமிறக்கா விட்டால் ஐதேகவின் கதை முடிந்துவிடும்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவோம் என்று மக்கள் தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் சமீர பெரோ தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை இலங்கை நாட்டு மக்கள் கோருகின்றனர். நாமும் அதையே வலியுறுத்துகின்றோம்.

சஜித் பிரேமதாசவை களமிறங்காவிட்டால் அது கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும். அத்துடன், ஐ.தே கட்சியின் கதையும் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments