பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவே யாழில் அலுவலகமாம்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் தனது பிராந்திய அலுவலகங்களை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாபிக்கப்படுகின்றது என்று குறித்த அலுவலகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தின் பிராந்திய அலுவலகத்தை இன்று காலை யாழ்ப்பாணம் - ஆடியபாதம் வீதியில் திறந்து வைத்த போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

சில குடும்பங்கள் அரச நிறுவனங்கள் மீது அவநம்பிக்கைகளை கொண்டுள்ளன, இருப்பினும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தனது கடமைகளை தொலைதூரத்திலிருந்து செயலாற்ற முடியாது. என்றார்.

No comments