யாழில் 15 கிலோ மர்மப் பொதி - வெடிமருந்தா?

யாழ்ப்பாணம் - ஆழியவளை கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் 15 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கடற்படையின் உதவியுடன் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், லெப்டினன் கெமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

குறித்த பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments