தொடங்கியது நெல்சிப் கைது?


வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாரிய மோசடியான நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் பொறியியலாளர் சச்சிதானந்த சைலாதரன் வவுனியா பொலிசாரால் கைது சைய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே ஒப்பந்த அடிப்படையிலான பொறியியலாளரை கைது செய்ததன் மூலம் ஏனைய வடமாகாண சபை அதிகாரிகளை தப்பிக்க வைக்க முயற்சிகள் தொடர்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியொருவர் அவுஸ்திரேலியா தப்பித்துள்ள நிலையில் மற்றைய அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுமுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஆரம்ப விசாரணைகள் மேற்கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டியிருந்தது.

அதன் அடிப்படையில் இடம்பெறும் விசாரணைக்காக தற்போது குறித்த பொறியியலாளர் கடந்த 05ம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் புற்படுத்தப்பட்டதன் அடப்படையில் தற்போது 15ம் திகதி வலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments