யாழ்.பேரணி முன்னுதாரணமாகட்டும்: சி.வி.விக்கினேஸ்வரன்


தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவிருக்கும் 'எழுக தமிழ்'பேரணிக்கு எமது முதலாவது பேரணி நிகழ்வு உத்வேகம் ஊட்டும் வகையில் அமைய வேண்டுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முன்னைய 'எழுகதமிழ்' பேரணிகள் நடக்கும் போது நாம் பலர் உத்தியோக பதவியில் இருந்தோம். எமக்குப் பதவி வழி அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் தரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான அரச அங்கீகாரத்துடன் கூட்டத்தில் ஈடுபடமுடியாது. எனவே எமது மக்களின்பாதுகாப்புவிடயங்கள் எத்தகைய அரச அங்கீகாரத்துடன் நடைபெறப் போகின்றன என்பதை நாம் பரிசீலித்துப் பார்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அண்மைய உயிர்த்த ஞாயிறு நடவடிக்கைகளால் நல்லூர் ஆலயத்தில் கூட பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரவைக்கு ஏதேனும் பாதுகாப்புத் தடைகள் விடுக்கப்படுமா என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும். 

எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள்,சமூக நிறுவனங்கள்,மதபீடங்கள்,மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள்,சட்டத்தரணிகள் சங்கங்கள்,பெண்கள் அமைப்புக்கள்,ஆசிரிய அமைப்புக்கள்,மாணவஅமைப்புக்கள்,தமிழர் மரபுரிமைப் பேரவை,தொழிற் சங்கங்கள்,வர்த்தக சங்கங்கள்,விவசாய,கடற்றொழில் சங்கங்கள்,சமாசங்கள் போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சிபேதமின்றி செம்ரெம்பர் ஒற்றுமையாய் ஒருங்கு சேரவேண்டும். யாவரும் திரண்டெழுந்துதமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்குவேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எம் மக்களைசெப்ரெம்பர் பேரணியுடன் இணைக்கப் போகும் இணைப்புப் பாலங்கள் என்பதைமறந்துவிடாதீர்கள். ஆட்சியாளர்களால் இதுவரைகவனிக்கப் படாத ஆறு விடயங்கள் எமதுபேரணியில் வலியுறுத்தப்பட இருக்கின்றன. அவையாவன–

1. எமது பூர்வீகநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் செயல்கள் ஆராயப்பட்டுசபையின் நடவடிக்கைகள் வடகிழக்கைப் பொறுத்தவரையில் உடன் நிறுத்தப்படவேண்டும hஎன்பது பரிசீலிக்கப்படவேண்டும். 

2. சர்வதேச போர்க்குற்றவிசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்குநிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 

3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்யவேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை. 

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத் ; நடைபெறவேண்டும். பலமாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒருகாலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டும். 

5. வடகிழக்கு மாநிலங்களை இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயேமுகாம் இட்டுஉள்ளனர் என்றுதெரியவருகின்றது. 

6. இடம் பெயர்ந்தஎம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்படவேண்டும். 

மேற்கண்ட ஆறு விடயங்களே எமது பேரணியில் முக்கியமாக கூறப்படப் போகும் விடயங்கள். எமதுஅரசியல் தேவைகளைஏற்கனவேதமிழ் மக்கள் பேரவைதமதுஅரசியல் முன் மொழிவுகள்ஊடாகயாவருக்குந் தெரியப்படுத்தியுள்ளது. அவற்றைநாங்கள் இனிவரும் 'எழுகதமிழ்'பேரணியில் வலியுறுத்துவோம்.

எமது பதாகைகள்,சுவரொட்டிகள் ஆகியன மேற்கண்ட ஆறு விடயங்களை இப்போதைக்கு வலியுறுத்தினால்ப் போதும் என்று நினைக்கின்றோம். ஏந்தப்படப் போகும் பதாகைகள்,மற்றும் ஒட்டப்படப் போகும் சுவரொட்டிகள் எமதுதணிக்கைக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டே அனுமதிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் மேற்படி ஆறு விடயங்களையும் இலகுவாக அனுமதிக்கமுடியும். அவற்றைச்செய்யுமாறுநாம் அரசை,அரசாங்கத்தை, ஜனாதிபதிவேட்பாளர்களைவேண்டுவது எல்லாவிதத்திலும் நியாயமானது. எனவே இவற்றை இம்முறைவலியுறுத்துவோமாக!

சிலர் எமது பேரணியில் சேரவிருப்போரைத் தடுக்கக் கங்கணம் கட்டியுள்ளதாகஅறிகின்றேன். ஆனால் சுயநலகாரணங்களுக்காக,கட்சிநலம் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களையார் எடுத்தாலும் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். நாம் இங்கு கட்சிகளை வளர்க்க முற்படவில்லை. மக்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாகப் போராடவே ஒன்றுபடுகின்றோம். ஒன்றுபட்டு எமது இன்னல்ப்படும் மக்களின் விடிவிற்காகப்போராடநினைத்துள்ளோம். 

ஆகவேஎமதுபேரணியைஇவ்வாறாகக் குழப்பஎத்தனிப்போர் சம்பந்தமாகவிழிப்பாக இருங்கள். எமக்குஒத்துழைப்புநல்காவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் தராது இருங்கள் என்று அவர்களிடம் நல்லமுறையில் கூறிவையுங்கள். எமது தமிழ் மக்களின் வருங்காலம் என்பது இப்பேர்ப்பட்ட சிந்தனையுடையவர்களையும ;உள்ளடக்கும். நாம் போராடுவது அவர்களுக்காகவுந் தான் என்பதை எவரும் மறத்தல் ஆகாது. அந்த வகையில் அவ்வாறானசிந்தனைகள் எவருக்காவது இருக்குமானால் அவற்றைப் புறந்தள்ளிவைத்து எம்முடன் சேர்ந்து பயணிக்க அவர்களை உள்ளன்புடன் அழைக்கின்றோம் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments