முக்கிய படுகொலைகள் விசாரணைகளை இறுதி செய்ய பணிப்பு

இலங்கையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான படுகொலை தொடர்பிலான விசாரணைகளை இறுதி செய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சட்ட விதிகளுக்கு இணங்குமாறும் அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவுறுத்துவதுடன், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டமை, 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை மற்றும் லசந்த விக்ரமதுங்க, வஷிம் தாஜுதீன் ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளை முடிவு செய்வதை உறுதி செய்து அறிக்கையை சமர்பிக்குமாறும் சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments