கோத்தாவிற்கு இறுகும் கயிறு:தூசு தட்டப்படும் கோவைகள்?


கோத்தபாயவிற்கு ஆப்படிக்கும் 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை உறுதிசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிடம், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேட்டுக்கொண்டுள்ளார். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரக்பி விளையாட்டு வீரர வசீம் தாஜுதீன் மரணம் உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் தொடர்பில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தபாயவை கடந்த நான்கரை வருடங்களாக பாதுகாத்ததாக ரணில் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்குகள் தூசு தட்டப்படுகின்றமை கவனத்தினை ஈர்த்துள்ளது. 

இதனிடையே சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறீPலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments