உணர்வை மதிக்காத சேதுபதி, படத்தில் இருந்து தான் விலகவில்லையாம்!

திரை நடிகர் விஜய் சேதுபதி இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது அந்நிலையில் பல தமிழ் உணர்வாளர்களும் , புலம்பெயர் தமிழர்களும் , எழுத்தாளர்களும் , சமூக ஆர்வலர்களும் முத்தையா முரளில்தரன் அவர் ஒரு சிங்கள விசுவாசி என்றும் , எந்த நிலையிலும் அவர் ஒரு மனிதாபி மாதிரியாவது செயல்படவில்லை , இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட இனப்படுகொலை , கொடுமைகள் பற்றி பேசுவதற்கு அஞ்சிய நபர் அவரின் வாழ்கை வரலாற்றை சிறந்த மனித நேயரான விஜய் சேதுபதி நடிப்பது தவறு என்று கூறினார் , இதையடுத்து அந்த படத்தில் இருந்து விலகியதாக ஒரு உத்தியோகபூர்வம் அற்ற செய்தி வெளியாகியிருந்தது , அது  பல தமிழர்களுக்கு ஆறுதலையும் விஜய் சேதுபதி மீது மரியாதையும் ஏற்படுத்தியிருந்தது.

அனால் தான் முரளிதரன் வரலாற்று  படத்தில் இருந்து விலகவில்லை எனவும் , அந்த படத்தில் சிறந்த கருத்து இருப்பதாகவும் , ஒற்றுமையை பிரதிபலிக்கும் கதையாக அது அமைத்துள்ளதாகவும் , திரைப்படம் வரும்போது எல்லோரு பார்த்து கொள்வீர்கள் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெனாவெட்டாக கூறியுள்ளார்.

No comments