கோட்டாவிற்கு குடைபிடிக்கும் துணைக்குழுக்கள்?


கோட்டபாய ராஜபக்சவிற்கு விளக்கு பிடிக்க முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள் பலவும் மீண்டும் களமிறங்க தொடங்கியுள்ளன.

கோட்டாவிற்கே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முதலாவது பிரசங்கத்தை ஆரம்பித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புக்கு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இக்கருத்தை அவர் வெளியிட்டார். நேற்று பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த போதே விநாயகமூர்த்தி முரளிதரன் இக்கருத்தை வெளியிட்டார். ஆனால் இக்கருத்துக்கு வடக்கு கிழக்கு மக்கள் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த கோட்டபாய ராஜபக்ஸவை எவ்வாறு எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் இவற்றை முரளிதரன் மறந்திருக்கலாம் நாம் மறக்கவில்லை எனவும் கருத்துத் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே சித்தார்த்தன் பின்கதவால் சந்தித்துள்ள நிலையில் டக்ளஸ் தனது கடையினை மீண்டும் கோத்தாவுடன் விரித்துள்ளமை தெரிந்ததே.

No comments