அயல்நாட்டவர்களை ட்ரம்பிடம் போட்டுக்கொடுத்த மோடி!

காஷ்மீர் விவகாரம், எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு எதிர்பார்த்தவாறே இந்த நடவடிக்கையை அரசு வெற்றிகரமாக முடித்தது.
காஷ்மீரை காரணம் காட்டி இந்தியாவுடன் பிரச்னை செய்து வந்த பாகிஸ்தானுக்கு, மத்திய அரசின் நடவடிக்கை கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனை தடுக்க ஐ.நா. சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை எடுத்துச் சென்றனர். பாகிஸ்தானுக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் சிறப்பான தூதரக நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் நடத்தவிருந்த சதிகள் முறியடிக்கப்பட்டன.
இந்த நிலையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைப் பேசியில் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டி விடுவதாகவும், அது தெற்காசிய பிராந்திய அமைதிக்கு நல்லதல்ல என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சூழலில் மோடி - ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.

No comments