ஐநா கைவிட்டுவிட்டதை கையில் எடுக்கும் ஸ்டாலின்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்து பாராளுமன்றத்திலும் நிறைவேற்றியுள்ளது. நிலையில் இந்தியாவிலேயே திமுக தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
 
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து ஐநா மூலம் முயற்சித்த போதிலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஐநாவே கைவிட்டுவிட்டது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்களும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என அவர் அறிவித்துள்ளார்.
ஐநாவே  உள்நாட்டு விவகாரம் என்று கூறி கைவிட்டுவிட்டதை திமுக கையில் எடுப்பதால் எந்த மாற்றமும் ஏற்ப்படப்போவதில்லை என்பதே அனைவரின் கருத்தும், பாகிஸ்தான் , சீனா போன்றவை வேற்று நாடுகள் , அனால் திமுக இந்தியாவின் முக்கய கட்சியாக இருப்பதால் அனைவரினாலும் கவனிக்கப்படுகிறது.
 

No comments