120,000 டொலர்களுக்கு விற்பனையாது ஒபாமாவின் கூடைப்பந்து ஜேர்சி

அமொிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவிற்குச் சொந்தமான கூடைப்பந்து ஜேர்சி 120,000 அமொிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

பாராக் ஒபாமா ஹாவயில் இருந்த போது புனேஹு உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணியியில் விளையாடியுள்ளார். அப்போது அவருக்கு 18 வயது. அவர் அணிந்த ஜேர்சியின் இலக்கம் 23. குறித்த இலக்கத்துடன் ஒபாமாவின் புகைப்படங்கள் கல்லூரி காலத்து புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளன.

1978-1979 ஜெர்சியை பீட்டர் நோபல் வைத்திருந்தார். அவர் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவின் ஹவாயில் உள்ள அதே புனாஹூ பள்ளியில் படித்திருந்தார். ஆனால் ஒபாமாவிற்கு மூன்று ஆண்டுகள் பின்னே கல்வி பயின்றிருந்தார்.

No comments